நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் நிர்வாகம் தொடரும்: கிளந்தான் உலாமா நம்பிக்கை

கோத்தாபாரு:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் நிர்வாகம் தொடரும்  கிளந்தான் உலாமா ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிர்வாகம் நாட்டை சிறப்பாக பராமரிக்கப்பட முடியும்

இது இஸ்லாத்தின் வளர்ச்சி, பொருளாதாரத்தில் எந்த தாக்கத்தையும் தவிர்க்கும்.

வரும் ஜூலை 26 அன்று கோலாலம்பூரில் ஒரு பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது.

இதன் மூலம் சில கட்சிகள், குறிப்பாக எதிர்க்கட்சிகள் பிரதமரை வீழ்த்த முயற்சிப்பாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் தாம் இந்த நம்பிக்கையை தெரிவிப்பதாக கிளந்தான் ஜபா பாண்டோக் துணைத் தலைவர் சைக் வஜிர் சே அவாங்  கூறினார்.

அடிக்கடி அரசாங்க மாற்றங்கள் மக்களின் வாழ்க்கையை மட்டுமே பாதிக்கும்

பள்ளிகளின் வளர்ச்சி உட்பட பொருளாதாரம் மந்தமாகிவிடும்.

மலேசியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு அரசாங்கம் என நடைமுறை உள்ளது.

ஆனால்  சில நேரங்களில்.ஒரு வருடம் அல்லது இரண்டு  ஆண்டுகளுக்கு ஒரு அரசாங்கம் உள்ளது.

அடிக்கடி கொள்கைகள் மாறுவதால் நாடு பலவீனமாகவும் மங்கலாகவும் இருக்கும். பொருளாதாரம் மங்கலாக உள்ளது.

இது இஸ்லாமிய வழி அல்ல என்று அவர் நேற்று இரவு புத்ராஜெயாவில் உள்ள புத்ரா பள்ளிவாசலில் நடந்த மலேசியா பெர்முனாஜத் 2025 நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு உரையாற்றினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset