நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மருத்துவர் போல் வேடமிட்டு, மாணவியை ஏமாற்றி நிர்வாண புகைப்படங்களை பெற்ற ஆடவர்: போலிஸ் விசாரணையை தொடங்கினர்

மஞ்சோங்:

மருத்துவர் போல் வேடமிட்டு, மாணவியை ஏமாற்றி நிர்வாண புகைப்படங்களை பெற்ற ஆடவர் தொடர்பிலான விசாரணையை போலிசார் தொ டங்கியுள்ளனர்.

மஞ்சோங் மாவட்ட போலிஸ் தலைவர் ஹஸ்புல்லா கூறினார்.

மருத்துவராகக் காட்டிக் கொண்ட ஒருவருக்கு நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பும்படி ஏமாற்றப்பட்ட 15 வயதுடைய இரண்டு மாணவிகள் தொடர்பான வழக்கில் போலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஆசிரியர் என்று கூறிக்கொள்ளும் ஒரு நபர், டெலிகிராம் மூலம் இரண்டு இளம் பெண்களக்கு தொடர்பு கொண்டு,

பின்னர் மருத்துவ நிபுணர் என்று கூறப்படும் மற்றொரு நபரை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அவர் பாதிக்கப்பட்டவரின் தனிப்பட்ட, குடும்பத் தகவல்களை கேட்டுள்ளார்.

மேலும் கர்ப்பப்பை, வாய், மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்காக பாதிக்கப்பட்டவரிடம் நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

மேலும் பாதிக்கப்பட்டவரின் புகைப்படங்கள் பரவிவிடுமோ என்ற கவலையில் உடனடியாக போலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பில் போலிசார் விசாரணைகலை தொடங்கி உள்ளதாக ஹஸ்புல்லா தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset