நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது

பெட்டாலிங் ஜெயா:

சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய இரு மாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக காற்று மாசு குறியீடு காட்டுகிறது.

இந்த காற்று மாசுக் குறியீடு (API) 24 மணி நேரத்தின் சராசரியாக கணக்கிடப்பட்டுள்ளது.

நெகிரி செம்பிலானின் நீலாய் பகுதியில் காற்று மாசுக் குறியீடு 156-ஆக பதிவாகியுள்ள நிலையில் போர்ட் டிக்சனில் காற்று மாசுக் குறியீடு 153-ஆக பதிவாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, சிலாங்கூரின் ஜோஹான் செத்தியாவில் காற்று மாசுக் குறியீடு 155-ஆகவும் பந்திங்கில் 151-ஆகவும் பதிவாகியுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset