நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் மகாதீர் ஆலோசகரானால், தேசியக் கூட்டணியின் பிரதமர் செல்வாக்கு குறையும்: அரசியல் ஆய்வாளர்

கோலாலம்பூர்:

தேசியக் கூட்டணியின் ஆலோசகராக துன் மகாதீர் நியமிக்கப்பட்டால்,  அவரது ஆளுமை அக்கட்சியின் பிரதமரின் செல்வாக்கைக் குறைக்கும் என்று அகாடமி நுசாந்தராவைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் அஸ்மி ஹசான் தெரிவித்துள்ளார். 

துன் மகாதீர் மற்ற அரசியல்வாதிகள் போல் அல்ல. 

அவர் வயதானவர் என்றாலும் அவருக்குத் தனி அரசியல் சூழலை அமைப்பதற்கான செல்வாக்கு உள்ளது என்று அஸ்மி ஹசான் கூறினார்.

அதுமட்டுமல்லாமல், துன் மகாதீர் எப்போதும்  ‘is either my way or no way’ என்ற அணுகுமுறையைப் பின்பற்றக் கூடியவராவார்.  அதுவே அவரின் வலிமையாக இருக்கலாம். 

இந்தச் சூழலில் அவர் தேசியக் கூட்டணியின் ஆலோசகராக இருந்தால், தேசியக் கூட்டணி சார்பில் வெற்றி பெறும் பிரதமரின் செல்வாக்கைக் குறைக்கும். பின், துன் மகாதீரின் அணுகுமுறை அவருக்கு சிக்கல்களை உருவாக்கக் கூடும் என்று அஸ்மி ஹசான் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும், துன் மகாதீரைத் தேசிய கூட்டணியின் ஆலோசகராக நியமிப்பது குறித்து அக்கட்சி சிந்தித்து செயல்பட வேண்டும்  என்று அஸ்மி ஹசான் குறிப்பிட்டார்.

இருப்பினும், தற்போதைய சூழலில் தேசியக் கூட்டணியில் துன் மகாதீர் போன்ற ஆளுமை கொண்ட தலைவர் அக்கட்சியில் இல்லாததால்,  அவரை ஆலோசகராக நியமிப்பது சரியான முடிவாக இருக்க கூடும் என்பதை அஸ்மி மறுக்கவில்லை. 

முன்னதாக,  துன் மகாதீர் தனது மூன்றாவது முறையாகப் பிரதமராகும் எண்ணம் இல்லை எனத் தெரிவித்தார். 

ஆனால், அடுத்த பொது தேர்தலில் தேசியக் கூட்டணி மத்தியில் ஆட்சியைத் தன் வசமாக்கினால் அக்கட்சியின் ஆலோசகராகச் செயல்படத் தனக்கு விருப்பம் இருப்பதாகத் துன் மகாதீர் கூறினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset