நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகாங் ஜேபிஜே இயக்குநர் பெயர் கொண்ட தற்காலிக வாகன நுழைவு அனுமதி போலியானது: ஜேபிஜே 

குவாந்தான்:

ஜேபிஜே இயக்குநரின் பெயரும் கையொப்பமும் கொண்ட வாகனப் பரிசோதனைக்கான வாகன நுழைவு அனுமதி போலியானது என்று பகாங் சாலை போக்குவரத்து துறை தெரிவித்தது.

தற்காலிக வாகன நுழைவு அனுமதிகளை ஜேபிஜே அலுவலகங்களில்  இயக்குநரின் கையொப்பம் தேவைப்படாமல் விண்ணப்பிக்கலாம் என்று பகாங் சாலை போக்குவரத்து துறை கூறியது.

பகாங் சாலை போக்குவரத்து துறை அதன் இயக்குநரின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளது.

நேற்று இந்தப் போலி ஆவணங்கள் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

போலி ஆவணங்களை வெளியிட்ட தரப்பினரைக் கண்டறியும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகயும் அத்துறை கூறியது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset