
செய்திகள் மலேசியா
கை, கால் கட்டப்பட்டு வாய் மூடப்பட்டு பகடிவதைக்கு இலக்கான மாணவி கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்டார்
சுங்கைப்பட்டாணி:
கை, கால் கட்டப்படு வாய் மூடப்பட்டு பகடிவதைக்கு இலக்கான மாணவி கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் சுங்கைப்பட்டாணியில் உள்ள ஒரு இடைநிலைப் பள்ளியில் நிகழ்ந்தது.
படிவம் ஒன்று மாணவி ஒருவர், பொறாமை காரணமாக தனது பள்ளித் தோழர்கள் இருவரால் பகடிவதைக்கு இலக்கானதாக நம்பப்படுகிறது.
13 வயது சிறுமியின் கை, கால்கள் கழுத்து பட்டையால் கட்டப்பட்டு, வாய் கைக்குட்டையால் மூடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை பள்ளி கழிப்பறையில் நடந்ததாக நம்பப்படுகிறது.
மாலை 6.30 மணிக்கு பள்ளி நேரம் முடிந்த பிறகும் தனது மகள் வழக்கம் போல் பள்ளியை விட்டு வெளியேறாததைக் கண்டு, பள்ளிக்கு வெளியே காத்திருந்த பாதிக்கப்பட்டவரின் தாயார் மகளைத் தேடத் துவங்கினார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார், பள்ளி பாதுகாவலர்கள் பள்ளி முழுவதும் தேடிய பிறகு, பின்னர் கழிப்பறையில் இருந்து அவரை மீட்டுள்ளனர்.
கால்கள், கைகளில் ஏற்பட்ட சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தன. அதிர்ச்சி அடைந்திருந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
மேலும் பாதிக்கப்பட்டவரின் தாயார் பின்னர் சம்பவம் குறித்து போலிசில் புகார் அளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளில் உதவுவதற்காக இதுவரை 13 வயதுடைய இரண்டு மாணவர்களை போலிசார் கைது செய்துள்ளனர்.
கோல மூடா மாவட்ட போலிஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் இதனை உறுதிப்படுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 20, 2025, 1:29 pm
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் நிர்வாகம் தொடரும்: கிளந்தான் உலாமா நம்பிக்கை
July 20, 2025, 1:26 pm
வாசிப்பவர்கள் மனதை உருக்கும் ஆழ்ந்த உணர்ச்சியை திருவாசகம் கொண்டுள்ளது: டத்தோஸ்ரீ சரவணன்
July 20, 2025, 12:11 pm
சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது
July 20, 2025, 11:02 am
துன் மகாதீர் ஆலோசகரானால், தேசியக் கூட்டணியின் பிரதமர் செல்வாக்கு குறையும்: அரசியல் ஆய்வாளர்
July 20, 2025, 10:03 am
பகாங் ஜேபிஜே இயக்குநர் பெயர் கொண்ட தற்காலிக வாகன நுழைவு அனுமதி போலியானது: ஜேபிஜே
July 19, 2025, 9:08 pm