நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்காக 9 உயர் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன: டத்தோஶ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் இந்திய சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2024 முதல்  9 முக்கிய உயர் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமக்கிருஷ்ணன் இதனை கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் எந்தவொரு இனத்தையும் ஓரங்கட்டாமல், நியாயமான பொருளாதார வளர்ச்சியைக் கட்டியெழுப்புவதற்கான உறுதிப்பாட்டிற்கு இது ஏற்ப உள்ளது.

நாடு முழுவதும் இந்திய சமூகத்தின் பொருளாதார  ஊக்குவிப்பதற்காக,  அமைச்சும் அதன் கீழ் உள்ள நிறுவனங்கள் மூலம் பல்வேறு உயர் தாக்க முயற்சிகளை செயல்படுத்துவதற்கு நான் தலைமை தாங்கியுள்ளேன்.

மேலும் இந்திய சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்த அமைச்சின் மூலம் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ளவும் திட்டமிடவும் முடியும் என்று பிரதமர் பரிந்துரைத்துள்ளார்.

2024 முதல் 2025 நடுப்பகுதி வரை நிதி, திறன் மேம்பாடு, பயிற்சி, கூட்டுறவு அதிகாரமளித்தல் மற்றும் சமூக ஈடுபாடு ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய மொத்தம் ஒன்பது முக்கிய முயற்சிகள் உருவாக்கப்படும்.

ஜூன் மாத நிலவரப்படி, பல்வேறு நிதி மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் 356 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 9,000 இந்திய சமூக தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர்.

குறிப்பாக  இந்த முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்களில் தெக்குன் , அமானா இக்தியார், பேங்க் ரக்யாத், எஸ்எம்இ வங்கி, எஸ்எம்இ கார்ப், எஸ்கேஎம் ஆகியவை முக்கிய பங்கை ஆற்றியுள்ளன என்று டத்தோஶ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset