நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜோ லோ ஷாங்காயில் இருப்பதாக மலேசியாவுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை: பிரதமர்

கோலாலம்பூர்:

தப்பியோடிய தொழிலதிபர் ஜோ லோ தற்போது சீனாவின் ஷாங்காயில் வசித்து வருவதாகக் கூறப்படும் செய்திகள் குறித்து மலேசியாவுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

1 எம்டிபி நிதி மோசடி ஊழலின் முக்கிய மூளையாக செயல்பட்டவர் ஜோ லோ. இவர் போலி ஆஸ்திரேலிய கடப்பிதழைப்  பயன்படுத்தி ஆஸ்திரேலியாவில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயிலுடன் சரிபார்ப்பதாக அவர் கூறினார். 

ஆனால் இது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. நான் சரிபார்க்கிறேன்.

நான் ஊடக அறிக்கைகளைப் படித்தேன். உள்துறை அமைச்சரிடம் நான் சரிபார்க்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset