நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களின் பணத்தை திருடவில்லை என்பதால் ராஜினாமா செய்ய மாட்டேன்: பிரதமர்

பாயான் லெப்பாஸ்:

தேசிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் உறுதியாக இருப்பதால் ஒருபோதும் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

ஒரு சில கட்சிகள் வலியுறுத்துவது போல் முறைகேடு அல்லது அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடாத வரை ஒருபோதும் ராஜினாமா செய்ய மாட்டேன்.

இந்த நிலைப்பாட்டில் தான் உறுதியாக உள்ளேன்.

மேலும் மக்களையும் நாட்டையும் மேம்படுத்துவதற்கான நம்பிக்கையை நிறைவேற்றுவதில் தொடர்ந்து கவனம் செலுத்துவேன்.

நான் மக்களின் பணத்தைத் திருடினால், அவர்கள் என்னை பதவி விலகச் சொல்வது நியாயம். ஆனால் நான் மக்களின் பணத்தைத் திருடவில்லை.

நான் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக பிரதமராக இருக்கிறேன். நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம் நாங்கள் வழங்கும் ஒப்பந்தங்கள், அனைத்தும் டெண்டர் செயல்முறை மூலம் செல்கின்றன.

ஆக நான் ஏன் பதவி விலக வேண்டும் என பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset