
செய்திகள் மலேசியா
ஷாங்காயில் போலி கடப்பிதழைப் பயன்படுத்தி ஜோ லோ ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்: பிராட்லி ஹோப் அம்பலம்
கோலாலம்பூர்:
ஷாங்காயில் போலி கடப்பிதழைப் பயன்படுத்தி ஜோ லோ ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார் என்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய நிதி ஊழலான 1 எம்டிபி அம்பலப்படுத்தியதற்காக இரண்டு புலனாய்வு பத்திரிகையாளர்களான பிராட்லி ஹோப், டாம் ரைட் ஆகியோர் வெள்ளிக்கிழமை வழங்கிய Finding Jho Low: Live with Bradley Hope & Tom Wrightன் சிறப்பு எபிசோடில் இந்த தகவலை அவர் அம்பலப்படுத்தினார்.
கிட்டத்தட்ட நான்கு வருட விசாரணைக்குப் பிறகு, 1 எம்டிபி நிதி மோசடி ஊழலின் முக்கிய மூளையாக செயல்பட்ட ஜோ லோ இறுதியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அனைத்துலக அதிகாரிகளால் தேடப்படும் இந்நபர் தற்போது சீனாவின் ஷாங்காயில் உள்ள ஒரு உயர்தர பகுதியில் போலி ஆஸ்திரேலிய கடப்பிதழைப் பயன்படுத்தி வசித்து வருவதாக நம்பப்படுகிறது.
ஜோ லோ தற்போது செல்வந்தர்கள் வசிக்கும் கிரீன் ஹில்ஸ் பகுதியில் இருப்பதாகவும், சொகுசு காரை ஓட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தாங்கள் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் மூலம், ஜோ லோ ஷாங்காய் நிதி மையத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் மலேசியா அவரை நாடு கடத்தும் செயல்முறையை தீவிரமாகக் கோரி வருகிறது.
இன்னும் ஆச்சரியப்படும் விதமாக, ஜோ லோ இப்போது சீன அரசாங்கத்தின் முக்கிய ஆலோசகராகச் செயல்படுகிறார் என்பதையும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
மலேசியாவால் தேடப்படும் தொழிலதிபரின் பணி, சர்வதேச தடைகளை எதிர்கொள்ளும் நிறுவனங்கள் உலகளவில் தொடர்ந்து செயல்பட உதவுகிறது என அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக ஜோ லோ மூளையாக செயல்பட்ட 1 எம்டிபி வரலாற்றில் மிகப்பெரிய நிதி ஊழலாகும்.
இதில் ஜோ லோ 35 பில்லியன் ரிங்கிட் மோசடி செய்ததாக உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த தொகையில் 11.4 பில்லியன் ரிங்கிட் ஜோ லோவின் தனிப்பட்ட கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டதாகவும், மற்றொரு 27.3 பில்லியன் ரிங்கிட் சீன நிறுவனங்களுடனான வணிக பரிவர்த்தனைகளுடன் தொடர்புடையதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஊழலை மூடுவதற்கான செலவு உட்பட மலேசியாவிற்கு ஏற்பட்ட மொத்த இழப்பு 82 பில்லியன் ரிங்கிட்டை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 19, 2025, 9:08 pm
ஜோ லோ ஷாங்காயில் இருப்பதாக மலேசியாவுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை: பிரதமர்
July 19, 2025, 9:08 pm
மக்களின் பணத்தை திருடவில்லை என்பதால் ராஜினாமா செய்ய மாட்டேன்: பிரதமர்
July 19, 2025, 5:04 pm
KLIA, ஜொகூர் சோதனைச் சாவடிகளில் தடங்கல்: ஆயிரக்கனக்கான பயணிகள் பாதிப்பு
July 19, 2025, 10:14 am
மறைந்த டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலுவிற்கு மஇகா மத்திய செயலவை மௌன அஞ்சலி
July 19, 2025, 10:12 am