நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

KLIA, ஜொகூர் சோதனைச் சாவடிகளில் தடங்கல்: ஆயிரக்கனக்கான பயணிகள் பாதிப்பு 

கோலாலம்பூர்: 

மலேசியாவில் பல இடங்களில் தானியக்க நுழைவுத் தடங்களில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

KLIA  கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், ஜொகூர் சோதனைச் சாவடிகள் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன 

வெளிநாட்டவர்கள் பல்லாயிரம் பேரால் தானியக்க நுழைவுத் தடங்களைப் பயன்படுத்த முடியவில்லை. சிங்கப்பூரர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உட்லண்ட்ஸ் வழி செல்லக்கூடிய ஜொகூர் சோதனைச் சாவடியில் பல்லாயிரம் பேர் 4 மணி நேரத்திற்கும் அதிகமாகக் காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

கூட்டத்தைச் சமாளிக்கக் கூடுதல் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

நேற்று (18 ஜூலை) நண்பகல் வாக்கில் தடங்கல் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் 200க்கும் அதிகமான தானியக்க நுழைவுத் தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மலேசியக் கடப்பிதழ் வைத்திருப்போரால் எந்தச் சிக்கலுமின்றி தானியக்க நுழைவுத் தடங்களைப் பயன்படுத்த முடிகிறது.

தடங்கலைச் சரிசெய்ய முயற்சி எடுக்கப்படுவதாக குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ ஜக்கரியா ஷஅபான் கூறினார். எதனால் தடங்கல் ஏற்பட்டது என்பது இன்னும் தெரியவில்லை. விசாரணை நடைபெறுகிறது என்று அவர் கூறினார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset