நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் அடையாளத்திற்கு வயது 100 மலேசியாவின் நூற்றாண்டு மனிதர் துன் டாக்டர் மகாதீர்

(சிறப்பு கட்டுரை)
இன்று, மலேசியாவின் மிகப்பெரிய அரசியல் ஆளுமைகளில் ஒருவரான துன் டாக்டர் மகாதீர் முகமது, தமது 100வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். 

ஒரு நூற்றாண்டு வாழ்க்கை என்பது சீரும் சிறப்பும் கொண்ட சாதனை. ஆனால் மகாதீரின் வாழ்க்கை, வெறும் நீளமான பயணம் அல்ல. அது மலேசியாவின் உருவாக்கத்தில் அடையாளப் பயணமாகும்.

“மலேசியா” என்ற கனவுக்குத் தந்தை

துன் ரசாக்கின் ஆட்சி, பிறகு து உசேன் ஒன் ஆகியோருக்குப் பின்னர், 1981-ஆம் ஆண்டில் மலேசியாவின் பிரதமராக பதவியேற்ற மகாதீர், ஒரு புதிய அரசியல் பயணத்தின் கதவுகளைத் திறந்தார். மேற்கு நாடுகளின் தொழில்நுட்பத்தை, கிழக்கு நாகரிகத்தின் ஒழுக்கத்தை ஒரே நேரத்தில் இணைத்தார். 

“The Look East Policy (LEP)”, “Wawasan 2020”, “Proton, Malaysia”, “The Multimedia Super Corridor (MSC)” – இவை அனைத்தும் அவரின் தலைமைத்துவத்தில் மலேசியா அடைந்த மிகப் பெரிய வளர்ச்சியில் ஒரு பங்குகாவும்

இரண்டு தலைமுறைகளுக்கு பிரதமர்

மகாதீர் என்பது ஒரே தலைமுறையின் தலைவர் அல்ல. 1981–2003 காலத்தில் மலேசியாவின் 4 ஆவது பிரதமராக 22 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தவர். பின்னர் 2018–2020 வரை, 92வது வயதில் மீண்டும் 7-வது பிரதமராக பதவியேற்றவர். இது மட்டுமல்ல, இலங்கை, பாகிஸ்தான், துனீசியா, ஈரான் உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகளுக்கும் அரசியல் ஆலோசகராக வலம் வந்தவர்.

எதிரிகள் பலர், ஆனால் பார்வை மட்டும் ஒரே திசை

மகாதீரின் வாழ்க்கையில் விவாதங்கள், விமர்சனங்கள், விலகல்கள் குறைவாக இல்லை. ஆனால் எதிலும் அவர் பின்வாங்கியதில்லை. ஒரே ஒரு இலக்கை மட்டும் நோக்கிப் பயணித்தவர் – மலேசியா முன்னேற வேண்டும், மலேசியர்கள் உரிமையுடன் வளர வேண்டும்.

அவரது எழுத்துகள் – “The Malay Dilemma”, “Doctor in the House” – இன்னும் நூற்றுக்கணக்கான நற்பண்புகளும், அரசியல் சூழ்நிலை பற்றிய நூல்களும் இன்று பல பல்கலைக்கழகங்களில் பாடமாக போதிக்கப்படுகின்றன.

புத்திசாலித்தனமும், நகைச்சுவையும், நாட்டுப்பற்றையும் ஒன்றாக இணைந்தவர்

அவர் மேடையில் பேசும்போது, நகைச்சுவையும் இருக்கும் உரையாடல்களில் விவாதமும் இக்கும் . ஆனால் உள்ளார்ந்தது நாட்டுக்கான ஆர்வமே அதிகமான தென்படும்

“மலேசியா ஒரு மூன்றாம் உலக நாடாக இருக்கக்கூடாது; நமக்குத் தேவையான சக்தி நமக்குள்ளேதான் உள்ளது” என்ற அவரது கூற்று, இன்று யாவரும் மேற்கோளாகச் சொல்கிறார்கள்.

ஒரு நூற்றாண்டு வாழ்ந்தவரை மனதார பாராட்டுவோம்

துன் டாக்டர் மகாதீர், மலேசியாவின் அடையாளம் மட்டுமல்ல. அவர் தான் சரித்திரம். ஒழுக்கமான வாழ்க்கை நம்மை உச்சியில் நிறுத்தும் என்பதை உலகிற்கு உணர்த்திய மகான். விமர்சனங்கள் இல்லாத தலைவர்கள் இல்லை. மகாதீர் மீதும் பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் இன்று 100ஆவது வயதை எட்டும் மகாதீரை அனைத்தையும் மறந்து அனைவரும் கொண்டாடி வருகின்றார்கள்.

இன்று இளைய தலைமுறைகள் வாட்ஸ்அப்பிலும், இன்ஸ்டாகிராமிலும் உங்களை நினைத்துப் பகிர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

100வது பிறந்த நாள் வாழ்த்துகள், துன் டாக்டர் மகாதீர்!
உங்கள் வாழ்க்கை – வரலாறு. உங்கள் வார்த்தைகள் – வழிகாட்டி. உங்கள் சாயல் – இந்த நாட்டின் அடையாளம்

- தயாளன் சண்முகம்
 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset