
செய்திகள் உலகம்
15 மணிநேரப் பயணத்துக்குப் பிறகு நாடு திரும்பிய குவாண்டஸ் விமானம்
பெர்த்:
ஆஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்ட குவாண்டஸ் ஏர்வேஸ் விமானம் கிட்டத்தட்ட 15 மணிநேரப் பயணத்துக்குப் பிறகு நாடு திரும்பியது.
போயிங் 787 ஜெட் விமானம் பெர்த்தில் இருந்து வழக்கமான 17 மணி நேர பயணத்திற்காக பாரிசுக்குப் புறப்பட்டது.
இந்நிலையில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கு வான்வெளியின் பெரும்பகுதி மூடப்பட்டது.
ஏவுகணைத் தாக்குதல் குறித்து விமான நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்பட்டபோது, அது இந்திய வான்வெளியின் தென்மேற்கு எல்லைகள் வரை சென்றிருந்தது.
இதனால் அது திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 15 மணி நேர பயணத்திற்கு பின் மேற்கு ஆஸ்திரேலிய தலைநகரில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
பெர்த்தில் இருந்து லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்துக்குச் செல்லும் மற்றொரு குவாண்டஸ் விமானமும் பாதிக்கப்பட்டு சிங்கப்பூருக்கு திருப்பி விடப்பட்டதாக குவாண்டஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 19, 2025, 11:42 am
இஸ்ரேல்-சிரியா சண்டை நிறுத்தம்
July 18, 2025, 5:42 pm
மியன்மார் பணிப்பெண் மரணம்: போக்குவரத்துக் காவல் அதிகாரிக்கு 10 ஆண்டுச் சிறை
July 18, 2025, 4:55 pm
ஏலத்தில் 5.3 மில்லியன் டாலருக்கு விலைபோன விண் வீழ்கல்
July 18, 2025, 4:47 pm
டொனால்ட் டிரம்ப், நரம்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்: வெள்ளை மாளிகை அறிவிப்பு
July 18, 2025, 10:23 am
அதிபர் டிரம்ப்புக்கு நாள்பட்ட நரம்பு பாதிப்பு: வெள்ளை மாளிகை
July 18, 2025, 9:39 am
இங்கிலாந்து அரசு வாக்களிப்பதற்கான வயதை 16 ஆக குறைத்தது
July 18, 2025, 12:11 am
இந்தோனேசியா பாணியில் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும்: டிரம்ப்
July 17, 2025, 4:11 pm
Coca-Cola பானத்தில் இனி கரும்புச் சர்க்கரை பயன்படுத்தப்படும்: அமெரிக்க அதிபர்
July 17, 2025, 12:14 pm