நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூத்த நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையிலிருந்து அன்வார் விலக வேண்டும்: துன் மகாதீர்

கோலாலம்பூர்:

மூத்த நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையிலிருந்து பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விலக வேண்டும்.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

துன் மகாதீர்  தலைமையிலான நீதித்துறை அமைப்பின் பாதுகாப்பு செயலகத்தின் கூட்டம் நேற்று தலைநகரில் நடைபெற்றது.

இந்த வட்டமேசைக் கூட்டத்துடன் இணைந்து ஒப்புக் கொள்ளப்பட்ட ஆறு தீர்மானங்களில் இந்த அழைப்பும் ஒன்றாகும்.

டத்தோஶ்ரீ அன்வாரின் முன்னாள் ஆராய்ச்சி உதவியாளர் முகமது யூசோப் ராவ்தர் தாக்கல் செய்த வழக்கைக் குறிப்பிடுகையில், அவரது நீதிமன்ற வழக்கு தீர்க்கப்படும் வரை பிரதமர் பதவியில் இருந்து விடுப்பு எடுக்கவும் செயலகம் முன்மொழிந்தது.

மேலும் அவர் எதிர்கொள்ளும் தனிப்பட்ட வழக்குகள் காரணமாக அவர் பதவியில் இருக்கும் வரை நீதி நிர்வாகத்தில் இடையூறு ஏற்படுவதற்கான கருத்து அல்லது சாத்தியக்கூறு இருக்கும்.

நீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகளின் கடமைகளை ஏற்க பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் பெயர்கள் தகுதிகள், நேர்மை, மூப்புத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

அரசியல் தொடர்புகள் அல்லது விருப்பங்களின் அடிப்படையில் அல்ல என்று துன் மகாதீர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset