நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வம்சம் கருவுறுதல் மையம் மலேசியாவில் கார் அடிப்படையிலான விழிப்புணர்வு விளம்பரத்தைத் தொடங்கியுள்ளது

கோலாலம்பூர்: 

வம்சம் கருவுறுதல் மையம் மலேசியாவில் கார் அடிப்படையிலான விழிப்புணர்வு விளம்பரத்தைத் தொடங்கிய முதல் கருவுறுதல் மையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 

வம்சம் கருவுறுதல் மையத்தின் சின்னம், தொடர்பு எண்கள் ஆகியவற்றின் படங்கள் ஒட்டப்பட்ட கார் கோலாலம்பூரின் பல்வேறு சாலைகளில் சென்று குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகளுக்கும் பொது மக்களுக்கும் நேரடியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. 

இது வெறும் விளம்பரம் மட்டுமல்ல. மாறாக, குழந்தை பெற இயலாலும் தவிக்கும் தம்பதிகள் கைவிடப்படவில்லை. அவர்களுக்கு தங்களின் உதவி இருப்பதை நினைவூட்டும் வகையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய கருவூல மற்றும் குடும்ப மேம்பாட்டு சங்கத்தின் தலைவியும் வம்சம் கருவுறுதல் மையத்தின் நிர்வாக ஆலோசகருமான முனைவர் சத்தியவதி அழகிரிசாமி தெரிவித்தார். 

750-க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ள வம்சம் கருவுறுதல் மையம், தற்போது தங்களின் சேவையை மிகப் பெரிய அளவில் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல், மாதவிடாய் சுகாதாரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் Femi9 நிறுவனத்தின் மாதவிடாய் நாப்கின்களை வம்சம் கருவுறுதல் மையம் மலேசியாவில் அதிகாரப்பூர்வமாக விநியோகம் செய்து வருகின்றது.

Femi9 மாதவிடாய் நப்கின்கள் 100% இயற்கையான பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால், அது பெண்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதாகச் சத்தியவதி கூறினார்.

மேலும், இந்த மாதவிடாய் நப்கின்கள் பயன்படுத்துவதால் இயற்கை முறையில் கருவுறுதல் ஏற்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், Femi9 மாதவிடாய் நப்கின்கள் பெண்களின் ஹார்மோன்களைச்  சமநிலையாக்கவும் உதவுவதாகவும் சத்தியவதி நம்பிக்கை தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset