செய்திகள் மலேசியா
மனிதநேய உதவிகளை போலிடெக்னிக் உங்கு ஒமார் மாணவர்கள் மேற்கொண்டனர்
ஈப்போ:
கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, ஆலய வளாகத்தை 30 மாணவர்களும் 8 விரிவுரையாளர்களும் துப்புரவு செய்தனர் என்று போலிடெக்னிக் உங்கு ஒமாரின் விரிவுரையாளர் நித்தியா பெரியசாமி கூறினார்.
மாணவர்களும் விரிவுரையாளர்களும் தன்னார்வாலர்களாக முன்வந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பெரும்பாலான மாணவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்தபோதும் அனைவரும் காலை மணி 8.00 முதல் இரவு மணி 8.00 வரை இந்த துப்புரவு பணியில் ஈடுபட்டதோடு தோரணம் பின்னி ஆலயம் முழுவதும் கட்டினார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
இத்தகைய செயல் திட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் நல்ல பண்புநெறி, பிறருக்கு உதவுதல், ஆலய பூசைகள் நடவடிக்கைகளை நேரில் காண முடிந்தது. இத்தகைய நடவடிக்கைகளை திருவிழா காலங்களில் ஆங்காங்கே உள்ள உயர்கல்வி, இடைநிலைப்பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகத்திற்கு உதவ முன்வரலாம் என்று அவர் அறிவுறுத்தினார்.
இங்குள்ள ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவினர் துப்புரவு பணியில் ஈடுபட்டவர்களுக்கு உணவு, குடிநீர், போக்குவரத்துக்கு உதவும் பொருட்டு பேருந்து வழங்கி உதவியதற்கு அவர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
உயர்கல்விகூட மாணவர்கள் இத்தகைய மனிதநேய நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டுவது மிகவும் அவசியமாகும் என்று மாணவர்கள் தலைவர் குமுதன் கூறினார். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதின் வழி சிறந்த பண்புநலன் கொண்ட மாணவர்கள் உருவாக வழிவகுக்குகிறது என்று அவர் உறுதியுடன் கூறினார்.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
January 14, 2026, 7:11 pm
தை பிறந்தால் வழி பிறக்கும், நம்பிக்கையுடன் முன்னேறுவோம்: டத்தோஸ்ரீ ரமணன்
January 14, 2026, 6:51 pm
சமத்துவம் பொங்கட்டும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
January 14, 2026, 6:49 pm
தை பிறந்தால் வழி பிறக்கும்: டத்தோஸ்ரீ சரவணனின் பொங்கல் வாழ்த்து
January 14, 2026, 6:45 pm
நாட்டில் தமிழ் கல்வியைப் பாதுகாக்க கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 14, 2026, 6:38 pm
பத்துமலை சுவாமி மண்டப திறப்பு விழாவுடன் திருப்புகழ் நூல் வெளியீடு காணவுள்ளது: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:51 pm
அனைத்து தமிழர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
January 14, 2026, 4:42 pm
பத்துமலையில் தேசிய ஒற்றுமை பொங்கல் விழா; ஜனவரி 17ஆம் தேதி விமரிசையாக நடைபெறும்: டான்ஸ்ரீ நடராஜா
January 14, 2026, 4:32 pm
தாய்லாந்து லாரியில் டீசலை மாற்ற முயற்சித்த நான்கு பேர் கைது
January 14, 2026, 3:56 pm
தலைநகர் பந்தாய் பாருவில் குடி நுழைவுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை : 71 பேர் கைது
January 14, 2026, 3:37 pm
