செய்திகள் வணிகம்
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை சரிவு
புது டெல்லி:
இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனை மூன்றாவது காலாண்டில் 5 சதவீதம் சரிந்துள்ளது.
இதுகுறித்து கேனலிஸ் ஆய்வு நிறுவனம் கூறியதாவது:
கடந்தாண்டு மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டின் செப்டம்பர் காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை 5 சதவீதம் குறைந்து 4.75 கோடியானது. குறைந்த விலையுடைய ஸ்மார்ட்போன்களின் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து இந்த நிலை ஏற்பட்டது.
அதேசமயம், முந்தைய ஜூன் காலாண்டு விற்பனையுடன் ஒப்பிடும்போது செப்டம்பர் காலாண்டில் விற்பனை 47 சதவீதம் அதிகம்.
2021 செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ஷாவ்மி நிறுவனம் 1.12 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து 24 சதவீத பங்களிப்பை வழங்கி முதலிடத்தைப் பிடித்தது. இதற்கு அடுத்தபடியாக 91 லட்சம் ஸ்மார்ட்போன் விற்பனையுடன் சாம்சங் நிறுவனம் 19 சதவீத பங்களிப்பை வழங்கியது.
இவைதவிர, விவோ 81 லட்சம் (17 சதவீதம்), ரியல் மீ 75 லட்சம் (16 சதவீதம்), ஓப்போ 62 லட்சம் (13 சதவீதம்) நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்ததாக கேனலிஸ் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am
காலுறை சர்ச்சை தொடர்பான நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து
March 11, 2024, 11:35 am
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை
March 8, 2024, 11:06 am
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்தது
March 7, 2024, 5:41 pm
இஸ்ரேல் போரின் விளைவால் மத்திய கிழக்கு நாடுகளில் வர்த்தகம் இழந்து தவிக்கும் Starbucks
March 6, 2024, 12:05 pm
கோலாலம்பூருக்கு மீண்டும் பறக்கிறது பிரிட்டிஷ் ஏர்வேஸ்
March 5, 2024, 5:50 pm
உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தை இழந்தார் எலான் மஸ்க்
March 5, 2024, 5:17 pm
பங்களாதேஷ், ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுக்கு இந்தியா 64,400 டன் வெங்காயம் ஏற்றுமதி
March 4, 2024, 11:29 am