நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஓரிரு தினங்களில் சரவாக் சட்டமன்றம் கலைப்பு: அப்துல் கரிம் ரஹ்மான்

சரவாக்

மாநில சட்டமன்றம் அடுத்த சில தினங்களில் கலைக்கப்பட வாய்ப்புள்ளதை மறுப்பதற்கில்லை என பெர்சாத்து (Parti Pesaka Bumiputera Bersatu) துணைத்தலைவர் டத்தோ அப்துல் கரீ ம் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கலைக்கப்படுவது அம்மாநிலத்தில் 12ஆவது சட்டமன்றத் தேர்தலை நடத்த வழிவகுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதியுடன் சரவாக் அரசின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்தது. எனினும், கொரோனா பெருந்தொற்றையொட்டி அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்டதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், அடுத்த ஓரிரு தினங்களில் சட்டமன்ற கலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகக் கூடும் என்று அப்துல் கரீ ம் ரஹ்மான் தெரிவித்தார்.

"நானும் அந்த அறிவிப்புக்காக காத்திருக்கிறேன். ஏனெனில், அடுத்த ஆட்சி யாருடையது என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை மக்களிடம் திரும்ப அளிக்க வேண்டும்," என்றார் அப்துல் கரீ ம் ரஹ்மான்.

முன்னதாக, இன்று காலை சட்டமன்றம் கலைக்கப்படுவது குறித்த செய்தியை அம் மாநில முதல்வர் அபாங் ஜோஹாரி ஓபெங் மறுத்திருந்தார்.

நாளை அத்தகைய அறிவிப்பு ஏதும் வெளியாக வாய்ப்பில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset