செய்திகள் மலேசியா
மாநிலங்களுக்கு இடையேயான பயண அனுமதிக்குப் பிறகு தொற்று பாதிப்பு அதிகரிப்பு: கைரி கவலை
கோலாலம்பூர்:
மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட பின்னர் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த பாதிப்பு குறைந்துள்ள போதிலும், சில மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது கவலை அளிப்பதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
சிலாங்கூர், புத்ராஜெயா, சரவாக், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் அன்றாட பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாடு தழுவிய அளவில் சுகாதார மையங்களில் சிகிச்சை அளிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை வாரந்தோறும் குறைந்து வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் கைரி, கிளந்தான், சிலாங்கூர், சரவாக் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் பயன்பாடு 60 விழுக்காடுக்கும் அதிகமாக உள்ளது என்றும், பினாங்கு, பேராக் மாநிலங்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட பிறகே சிலாங்கூர், புத்ராஜெயாவில் தொற்று பாதிப்பு அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. சரவாக்கில் பாதிப்புகள் அதிகரிக்க இதுவே காரணம் என்று அமைச்சர் கைரி மேலும் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 11ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு இடையேயான பயணங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
March 28, 2024, 8:11 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏப்ரல் 8, 9ஆம் தேதிகளில் டோல் கட்டணம் இல்லை
March 28, 2024, 3:04 pm
குர்ஆனை விளங்கிக் கொள்வதற்கு ரமலான் மாதத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
March 28, 2024, 2:26 pm
டிஎஸ் ஜூவல்லர்ஸ், பேரா டிரான்சிட் பெர்ஹாட் நிறுவனத்தின் நோன்பு பெருநாள் அன்பளிப்பு
March 28, 2024, 2:23 pm
செராஸ் கொக்ரேய்ன் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய திருப்பணிக்கு உதவுங்கள்: அருள் ஆனந்தன்
March 28, 2024, 2:21 pm
பாதிக்கப்பட்ட Good year தொழிலாளர்களுக்கு வேலை வழங்க 22 நிறுவனங்கள் முன் வந்துள்ளன
March 28, 2024, 2:19 pm
இந்தியாவிலிருந்து 500,000 டன் வெள்ளை அரிசியை எதிர்பார்க்கிறோம்: முஹம்மத் சாபு
March 28, 2024, 2:17 pm
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
March 28, 2024, 1:32 pm
ABGR 2024 சந்தை கண்காட்சி; ஜொகூர் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வரலாறு படைத்தது.
March 28, 2024, 1:04 pm
ஏழை மக்கள், ஆதரவற்ற பிள்ளைகளுடன் சிலாங்கூர் சுல்தான் நோன்பு திறந்தார்
March 28, 2024, 12:06 pm