நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளத்தில் சிக்கிய ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் மீட்பு

கோலாலம்பூர்:

ஐந்து மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

அனைவரும் தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மலாக்காவில் 155 குடும்பங்களைச் சேர்ந்த 590 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக மலாக்கா சமூக பாதுகாப்புப் படை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Severe floods in Malacca, Malaysia »

Selangor Fire and Rescue Dept prepared to face possibilities of major flood

சிலாங்கூரில் 267 பேர் நிவாரண  முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்றும், கெடாவில் 39 குடும்பங்களைச் சேர்ந்த 162 பேர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெகிரி செம்பிலானில் இந்த எண்ணிக்கை 25ஆக உள்ளது.

பேராக்கில் வெள்ள ஆபத்தில் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் பத்து பேர் பெண்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset