செய்திகள் மலேசியா
மலாக்கா தேர்தல்: பெர்சாத்துவில் 6 தொகுதி தலைவர்கள், வேட்பாளர் பட்டியலை அளித்துள்ளனர்
மலாக்கா:
மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிட அடையாளம் காணப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலை 6 தொகுதி தலைவர்களிடம் இருந்து பெற்றுள்ளதாக பெர்சாத்து கட்சியின் மாநிலத் தலைவர் மொஹம்மத் ரஃபிக் நைஸாமொஹிதீன் Mohd Rafiq Naizamohideen தெரிவித்துள்ளார்.
இம் முறை நிபுணத்துவம் வாய்ந்த இளையர்கள் தேர்தலில் களமிறக்கப்படுவார்கள் என்றும், இதன் வழி அடுத்த பொதுத்தேர்தலுக்கு இளையர்களைத் தயார்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில வேட்பாளர்கள் மகளிர் மற்றும் இளையர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இறுதி வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் முடிவு செய்வார் என்றும் மொஹம்மத் ரஃபிக் தெரிவித்தார்.
"வேட்பாளர்களை யார் வேண்டுமானாலும் முன்மொழியலாம். எனினும், கட்சித் தலைவரிடம் அனைத்து பெயர்களும் அளிக்கப்படும்.
"அடுத்த பொதுத்தேர்தலில் 18 வயதானவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதை மனதிற்கொண்டு இளம் நிபுணர்கள் தேர்தலில் களமிறக்கப்படுவர்.
"பெரிக்கத்தான் நேசனல் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பெர்சாத்து, பாஸ் மற்றும் கெரக்கான் கட்சிகள் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிப் பங்கீடு குறித்து தொடர்ந்து பேசி வருகின்றனர்," என்றார் மொஹம்மத் ரஃபிக் நைஸாமொஹிதீன்.
தொடர்புடைய செய்திகள்
March 29, 2024, 6:32 pm
விடிஆர் விசாவுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: குடிநுழைவுத் துறை
March 29, 2024, 6:30 pm
நிர்வாகியை பேங்க் நெகாரா பணி நீக்கம் செய்தது நியாயமற்றது: நீதிபதி
March 29, 2024, 5:40 pm
இலவச டோல் சேவை கட்டணம் நீட்டிக்கப்படாது: அஹ்மத் மஸ்லான்
March 29, 2024, 5:33 pm
அல்லாஹ் காலுறை விவகாரம்: சுல்தான் நஸ்ரின் கவலை
March 29, 2024, 5:32 pm
லஞ்சம் வாங்கிய 34 அரசு ஊழியர்களை எம்ஏசிசி கைது செய்தது
March 29, 2024, 5:18 pm