நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா வெள்ளம்: மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் உயிரிழந்தார்

மலாக்கா:

மலாக்காவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் உயிரிழந்துள்ளார்.

முஹம்மத் டியா சே ஜுசோ (Mohd Diya Che Jusoh) என்ற அந்த 46 வயது தீயணைப்பு வீரர் நேற்று Ayer Keroh பகுதியில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தார். அச்சமயம் அங்கு கழுத்து அளவுக்கு வெள்ளநீர் தேங்கியிருந்தது.

வெள்ளம் காரணமாக வீடுகளில் முடங்கியிருந்த கிராம மக்களை மீட்பதற்குப் போராடிய அவர், திடீரென வெள்ளநீரில் விழுந்ததில் சுயநினைவை இழந்தார்.

Banjir Melaka: Anggota bomba nyaris lemas, masih kritikal | Astro Awani

இதையடுத்து, பத்து நிமிடங்களில் அவர் மீட்கப்பட்டார். பின்னர் அவருக்கு இதயத்துடிப்பை மீட்டெடுக்கும் CPR சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

முன்னதாக, கம்போங்க் சுங்கை புடாட் பகுதியில் வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் சிக்கிக்கொண்ட 14 பேரை மீட்கும் நடவடிக்கையில் தியாவும் பங்கேற்றார் என்றும், அவரது மரணம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் இயக்குநர் அபுபக்கர் கதாயின் (Abu Bakar Katain) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

முஹம்மாத் டியா சே ஜுசோ சிகிச்சை பலனின்றி இன்று காலை மலாக்கா மருத்துவமனையில் காலமானார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset