நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்‌ரேலுடனான உறவை சுமூகமாக்கும் எண்ணம் இல்லை: சைஃபுதின் அப்துல்லாஹ் திட்டவட்டம்

கோலாலம்பூர்:

இஸ்‌ரேலுடனான உறவை சுமூகமாக்கிக் கொள்ளும் எண்ணம் மலேசியாவுக்கு இல்லை என வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதின் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன நிலப்பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இஸ்‌ரேலுக்கு எதிரான பாலஸ்தீனியர்களின் போராட்டத்தை மலேசியா தொடர்ந்து ஆதரிக்கும் என்றார் அவர்.

பல்வேறு வட்டார மற்றும் அனைத்துலக மன்றங்களிலும் பாலஸ்தீனியர்களின் சுதந்திரத்துக்கான அபிலாஷையையும் சுதந்திர பாலஸ்தீனம் என்ற நிலைப்பாட்டையும் மலேசியா ஆதரிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

Msia denies it will join Abraham Accords, normalise ties with Israel

"பாலஸ்தீனிய இளம் தலைமுறையினர் மற்றும் செயல்பாட்டாளர்களின் போராட்டத்தை அங்கீகரிக்கும் வகையில் மலேசியாவின் ஆதரவு நீடிக்கும். பாலஸ்தீனிய மக்களுக்கு அரசியல் மற்றும் தார்மீக அடிப்படையிலான ஆதரவை மலேசியா தொடர்ந்து அளிக்கும்.

"மேலும், மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளையும் அனைத்துலக அமைப்புகள் மூலம் செய்யும்," என்று அமைச்சர் சைஃபுதின் அப்துல்லாஹ் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset