நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பயணம் மேற்கொள்ள ஆபத்தான நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் சேர்ப்பு: அமெரிக்கா அறிவிப்பு

சிங்கப்பூரில் தொற்றுப்பரவல் அதிகரிப்பு: தன் குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் அன்றாட தொற்று எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பயணம் மேற்கொள்ள ஆபத்தான நாடுகள் என்ற பட்டியலில் சிங்கப்பூரைச் சேர்த்துள்ளது அமெரிக்கா. இதற்கான குறியீட்டில் சிங்கப்பூர் நான்காம் நிலையில் உள்ளது என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, இப் பட்டியலில் சிங்கப்பூர் மூன்றாம் இடத்தில் இருந்தது.

இதையடுத்து, சிங்கப்பூருக்கான பயணங்களைத் தவிர்க்குமாறு தன் குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக சிங்கப்பூர் செல்ல வேண்டியிருந்தால், தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்துகொள்ளுமாறும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கும் கூட சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவதும், அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவுவதும் நிகழ்ந்து வருகிறது என்று அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset