நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிரபாஸ் நடித்த ராதே ஷ்யாம் டீஸர் வெளியாகிறது; விக்ரமாதித்யா யார்?

பாகுபலிக்குப் பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ மிகப்பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டது. ஆனால், ரசிகர்களை கவரவில்லை. அதனால், ராதே ஷ்யாம் படத்தின் வெற்றியை பிரபாஸ் அதிகம் எதிர்பார்க்கிறார்.

2022 ஜனவரி 14 அன்று ராதே ஷ்யாம் வெளியாவதை உறுதி செய்துள்ளது படக்குழு. 

முதல்கட்டமாக படத்தில் பிரபாஸ் ஏற்று நடித்திருக்கும் விக்ரமாதித்யா கதாபாத்திரத்தை விளக்கும் டீஸர் ஒன்றை 23 ஆம் தேதி வெளியிடுகின்றனர். இதனை அறிவிக்கும்விதமாக புதிய போஸ்டர் ஒன்றை விக்ரமதித்யா யார் என்ற கேள்வியுடன் வெளியிட்டுள்ளனர். 

பிரமாண்டமாக தயாராகியிருக்கும் இந்தப் படத்தை வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். 

Prabhas Shares A Beautiful Poster Of Radhe Shyam To Mark Janmasthami |  Filmfare.com

சமீபத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தனி போஸ்டர் வெளியிட்டிருந்தனர். தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் படத்தை வெளியிடுகின்றனர். 

23 ஆம் தேதி வெளியாகும் டீஸரில் வாய்ஸ் ஓவர் ஆங்கிலத்தில் இருக்கும். ஐந்து மொழி சப்டைட்டிலுடன் இதனை வெளியிட உள்ளனர். 

பாகுபலிக்குப் பிறகு பிரபாஸ் நடித்த சாஹோ மிகப்பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டது. ஆனால், ரசிகர்களைக் கவரவில்லை. அதனால், ராதே ஷ்யாம் படத்தின் வெற்றியை பிரபாஸ் அதிகம் எதிர்பார்க்கிறார்.

படத்தின் இயக்குனர் ராதா கிருஷ்ண குமார் உறுதியாக இருக்கிறார். படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாகும் என்பதில் அவருக்கு சந்தேகமேயில்லையாம். நம்பிக்கைத்தானே வாழ்க்கை.

தொடர்புடைய செய்திகள்

+ - reset