செய்திகள் இந்தியா
மமிதா மெஹர் மரணம்; ட்ரெண்ட் ஆகும் #JusticeForMamita ஹேஸ்டேக்
பள்ளி ஆசிரியை மமிதா மெஹர் மரணத்திற்கு நீதி கேட்டு ட்விட்டரில் #JusticeForMamita என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
புவனேஸ்வர்:
ஒடிசாவின் பலாங்கீர் மாவட்டத்தின் துரேகேலா தொகுதியை சேர்ந்தவர் மமிதா மெஹர். இவர், கலஹண்டி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். மேலும், அவர் பெண்கள் விடுதியின் வார்டனாகவும் பணியாற்றினார்.
இந்நிலையில், மமிதா கடந்த அக்டோபர் 8 காணாமல் போனார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அவரது உடல் எரிந்த நிலையில், கட்டுமானப் பணி நடைபெற்று கொண்டிருக்கும் பள்ளியின் மைதானத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
அவரது அருகில் இருந்த செயினை வைத்து அது மமிதாவின் உடல் என அவரது உறவினர்கள் உறுதி செய்தனர்.
இதையடுத்து அவரது சகோதரர் பாண்டி மெஹர் தனது சகோதரியின் மரணத்தில் பள்ளி நிர்வாக தலைவர் கோபிந்த் சாஹுவுக்கு தொடர்பு இருப்பதாக புகாரளித்தார்.
இதனடிப்படையில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், அவர் கடந்த 17ஆம் தேதி போலீஸ் காவலில் இருந்து தப்பினார். இதையடுத்து, அவர் குறித்த தகவல் தருபவர்களுக்கு 1,00,000 பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்தனர்.
இந்நிலையில், பங்கமுண்டா மாவட்டத்தில் உள்ள சாஹுவின் சகோதரி வீட்டில் இருந்து போலீசார் அவரை கைது செய்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த 3 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அவரின் கொலை வழக்கில் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ட்விட்டரில் #JusticeforMamita என்ற ஹேஸ்டேக்கில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
March 29, 2024, 1:50 pm
குறைந்தது 50 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தாருங்கள்: காங்கிரஸ் தலைவரிடம் முஸ்லிம் அமைப்பு கோரிக்கை
March 28, 2024, 1:36 pm
போட்டியிட வாய்ப்பு மறுப்பு: வருண் காந்திக்கு காங்கிரஸ் அழைப்பு
March 28, 2024, 1:21 pm
கேஜரிவால் கைது: நியாயமான விசாரணைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
March 25, 2024, 11:51 pm
3 IDIOTS உண்மை நாயகனின் லடாக் உண்ணாவிரதத்துக்கு பெருகும் ஆதரவு
March 25, 2024, 4:08 pm
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
March 24, 2024, 6:55 pm
அரவிந்த் கேஜ்ரிவால் கைதை கண்டித்து மார்ச் 31இல் ‘இண்டியா’ கூட்டணி மாபெரும் பேரணி
March 24, 2024, 5:06 pm
4 ஆவது வகுப்பு படிக்கும் உத்ரா ஜானகியின் முதல் நோன்பு
March 23, 2024, 4:11 pm
திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீட்டில் சிபிஐ சோதனை
March 23, 2024, 10:46 am
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை காவல் விசாரணை
March 22, 2024, 12:42 pm