நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சென்னை அணிக்கு விரைவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சேப்பாக்கத்தில் பாராட்டு விழா

சென்னை:

சென்னை அணிக்கு விரைவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெறும் என்றும்  சி.எஸ்.கே இல்லாமல் எம்.எஸ் தோனி இல்லை. எம்.எஸ் தோனி இல்லாமல் சி.எஸ் கே இல்லை என சென்னை அணியின் உரிமையாளரும் முன்னாள் ஐ.சி.சி தலைவருமான ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. 

முன்னாள் ஐசிசி தலைவர் ஸ்ரீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ரூபா குருநாத், திருப்பதி தேவஸ்தான தமிழ்நாடு நிர்வாக குழு தலைவர் சேகர் ரெட்டி ஆகியோர் ஐ. பி.எல் கோப்பையை தி நகரில் உள்ள ஏழுமலை வெங்கடாசலபதி முன் வைத்து பூஜை செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீனிவாசன்,

எங்கள் நிறுவனம் திறக்கப்பட்டு 75 வது வருடத்தில் கோப்பையை தோனி பெற்று கொடுத்துள்ளார். இதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த ஆண்டு ஐ. பி.எல் தொடரில் தகுதி சுற்றை தாண்டவில்லை இந்தாண்டு எப்படியோ என்று நினைத்தார்கள் ஆனால் எம்.எஸ் தோனி கண்டிப்பாக சென்னை அணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். சொன்னபடியே கோப்பையை பெற்றுக் கொடுத்துள்ளார்.

Still haven't left behind': MS Dhoni hints at returning for CSK next year  after leading them to 4th IPL title, Sports News | wionews.com

சென்னை அணியின் வெற்றியை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். தற்போது நடைபெறும் உலக கோப்பை போட்டி முடிந்ததும் தோனி சென்னை வருவார். தோனியின் கையால் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கோப்பை வழங்கப்படும். முதலமைச்சர் தலைமையில் சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

இந்தாண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி சிறப்பான அணி, தோனி மெண்டராக உள்ளதால் நிச்சயம் இந்த முறை இந்திய அணி கோப்பையை வெல்லும்.

வரும் ஐ. பி.எல் ஏலத்தில் தோனி இடம் பெறுவாரா என்கிற கேள்விக்கு, சி.எஸ்.கே இல்லாமல் எம்.எஸ் தோனி கிடையாது. எம்.எஸ் தோனி இல்லாமல் சி.எஸ் கே கிடையாது. எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம் என்பது குறித்து இதுவரை பி.சி.சி.ஐ விதிமுறையை வெளியிடவில்லை. விதிமுறைகள் அடிப்படையில் முடிவு செய்வோம். திறமையான தமிழ்நாடு வீரர்களுக்கு நிச்சயம் அணியில் இடம் உண்டு. டி.என்.பி.எல் மூலமாக திறமையான தமிழ்நாடு வீரர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset