நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

19 ஆண்டுகளுக்குப் பிறகு தாமஸ் கிண்ண போட்டியில் வாகை சூடிய இந்தோனேசியா

ஜகார்தா:

19 ஆண்டுகளுக்குப் பிறகு தாமஸ் கிண்ண பேட்மின்டன் போட்டியில் வாகை சூடியுள்ளது இந்தோனேசியா. இறுதிப்போட்டியில் அந்த அணி சீனாவை வீழ்த்தி கிணத்தை தட்டிச் சென்றது.

டென்மார்க்கில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தோனேசியாவின் அந்தோனி சினிசுகா கிந்திங்கும் (Anthony Sinisuka Ginting), சீனாவின் லூ குவாங் ஸூவும் (Lu Guang Zu) முதல் ஆட்டத்தில் மோதினர்.

இதில் 18-21, 21-14, 21-16  என்ற செட் கணக்கில் அந்தோனி சினிசுகா வெற்றி பெற்றார்.

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் ஃபஜர் அல்ஃபியன் - முஹம்மத் ரியான் ஆர்டியான்டோ (Fajar Alfian-Mohamad Rian Ardianto) இணையானது சீனாவின் ஹீ ஜி டிங் -ஜவ் ஹோ டாங் (He Ji Ting-Zhou Hao Dong) இணையை,  21-12, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

Indonesia lift Thomas Cup again after almost two decades | Sports | Malay  Mail

இதையடுத்து உலகின் ஏழாம் நிலை வீரரான இந்தோனேசியாவின் ஜோனத்தன் கிறிஸ்டி (Jonatan Christie), சீனாவின் லீ ஷீ ஃபெங்கை (Li Shi Feng) 21-14, 18-21, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி கண்டார்.

இதன் மூலம் 14ஆவது முறையாக தாமஸ் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது இந்தோனேசியா. மேலும், கடந்த 2002ஆம் ஆண்டில்தான் அந் நாடு கடைசியாக இக் கிண்ணத்தை வென்றிருந்தது.

சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தாமஸ் கிண்ணத்தைக் கைப்பற்றியதை அடுத்து இந்தோனேசிய வீரர்களும் அந் நாட்டு பேட்மின்டன் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset