நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தடுப்பூசி போடுவது கட்டாயமா?: முடிவெடுக்கவில்லை என்கிறார் பிரதமர்

புத்ராஜெயா:

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படுவது குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் தடுப்பூசிக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

தடுப்பூசிக்கு எதிராகச் செயல்படும் சில குழுவினர் பொய்யான தகவல்களைப் பரப்புவதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர், இத்தகையோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க நாட்டின் சட்டத்தில் இடமுள்ள எனச் சுட்டிக்காட்டி உள்ளார்.

"தடுப்பூசி குறித்து பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சுகாதார அமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறோம்.

தடுப்பூசிக்கு எதிரானவர்கள் என்பதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தடுப்பூசி குறித்து அவர் பரப்புவது பொய்யான தகவல் என்பதால்தான் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப்.

முன்னதாக, மக்களின் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான குழுவினர் பொய் தகவல்களைப் பரப்புவதாகவும், இது தொடர்பாக தமது அமைச்சு பல்வேறு புகார்களை காவல்துறையில் அளித்திருப்பதாகவும் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதின் தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset