நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்டானா பல்கலைக்கழகம் 7வது பட்டமளிப்பு விழாவை கொண்டாடுகிறது: சாதனைகள் மற்றும் சிறந்த தரம் கொண்ட ஒரு மைல்கல்

புத்ராஜெயா:

பெர்டானா பல்கலைக்கழகம் அதன் 7வது பட்டமளிப்பு விழாவை கடந்த டிச்மபர் 7ஆம் தேதி  டபிள்ட்ரீ ஹில்டன் புத்ராஜெயா லேக்க்சைடில் நடைபெற்றது.

இந்த முக்கிய நிகழ்வு பல்வேறு துறைகளில் 158 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளின் கல்வி சாதனையை கொண்டாடியது. இது இப்பல்கலைக்கழகத்தின் சாதனையின் இன்னொரு அத்தியாயமாகும்.

இந்த ஆண்டின் பட்டமளிப்பு விழா வரலாற்று முக்கியத்துவம் கொண்டது, ஏனெனில் இது பெர்டானா பல்கலைக்கழகமும், ராயல் கல்லூரி ஆஃப் சர்ஜன்ஸ் இன்ஐர்லேண்ட் (PU-RCSI) மற்றும் நெஷனல் யூனிவர்சிட்டி ஆஃப் ஐர்லேண்ட் கூட்டணி திட்டங்களின் கடைசி பட்டதாரி குழுவை உள்ளடக்கியது.

இந்த விழாவின் சிறப்பு அம்சமாக, டான் ஸ்ரீ டத்தோ ஶ்ரீ டாக்டர் ஹாஜி முகம்மது இச்மாயில் பின் மரிகான், டான் ஸ்ரீ டத்தோ ஶ்ரீ டாக்டர் அலி பின் ஹம்சா, மேஜர் ஜெனரல் டத்தோ பஹ்லவான் டாக்டர் மோகனா டாஸ் இராமசாமி மற்றும் டத்தோ டாக்டர் அப்துல் ஷுக்கூர் பின் அப்துல் ரஹ்மான் ஆகியோர் "டான் ஸ்ரீ டத்தோ டாக்டர் மோகன் ஸ்வாமி மெடல் ஆஃப் ஹானர்" சிறப்பு பரிசினால் கௌரவிக்கப்பட்டனர்.

நம் நாட்டின் சுகாதாரம், கல்வி, ஆட்சி மற்றும் பொதுப் சேவைகளில் அவர்களது பெரும் பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக இது அமைந்தது. மேலும் கடந்த 13 ஆண்டுகளில் பெர்டானா பல்கலைக்கழகத்தின் பாரம்பரியத்தை வடிவமைப்பதில் அவர்களின் முக்கியமான பங்கு அமைந்துள்ளது.

பெர்டானா பல்கலைக்கழகம் இந்த சிறப்பு நிகழ்வை கொண்டாடும் போதிலும், அது தனது திறன்களை மேம்படுத்துதல், புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் எதிர்காலத் தலைவர்களுக்கு மாற்று கல்வியை வழங்குவதில் அதன் குறிக்கோளை உறுதிப்படுத்துகிறது.

பெர்டானா பல்கலைக்கழகத்தின் 7வது பட்டமளிப்பு விழா என்பது கல்வி சாதனைகளைக் கொண்டாடும் ஒரு நிகழ்வே அல்ல, ஆனால் இது சிறந்த தரம், மன உறுதி மற்றும் சமுதாயத்தின் பாரம்பரியத்தின் நீடித்த ஆதாரமாகும்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset