நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பண்டோரா பேப்பர்ஸ் விசாரணையில் அரசாங்கம் தலையிடாது: பிரதமர் இஸ்மாயில் சப்ரி

கோலாலம்பூர்:

எந்த அமலாக்க நிறுவனமும் பண்டோரா ஆவணங்களை விசாரிக்க விரும்பினால் அந்த விசாரணையில் அரசாங்கம் தலையிடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று தெரிவித்தார்.

கசிந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மலேசியர்கள் மீது விசாரணையை மேற்கொள்வதற்கு அமலாக்க நிறுவனங்களுக்கு, அவர்கள் போக்கில்  விசாரிக்கட்டும் என்று அரசாங்கம் விட்டுவிடும் அவர் கூறினார்.

"எத்தகைய விசாரணையையும் மேற்கொள்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் போன்ற அமலாக்க நிறுவனங்களுக்கு சுதந்திரம் அளித்துள்ளோம். அவர்களது விசாரணையில் நாங்கள் தலையிட மாட்டோம்.

"ஆனால் அவர்களிடம் முதலில் ஆதாரம் இருக்க வேண்டும்," என்று பிரதமர் இன்று காலை செந்தூலில் உள்ள செரி பேராக் பொது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அக்டோபர் 3 ஆம் தேதி, சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு, பண்டோரா பேப்பர்களை வெளியிட்டது. பல நாடுகளில் உள்ள பிரபல அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள், செல்வந்தர்கள், விளையாட்டாளர்கள், நடிகர்கள் என்று பல  பெயர்கள் அந்தப் பட்டியலில் இருந்தது.  அதன் தாக்கம் பெரும்பாலான  நாடுகளின் அரசியலிலும் எதிரொலித்தது. 

பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மலேசியர்களில் முன்னாள் நிதி அமைச்சர் துன் டைம் ஜைனுடின், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், பிகேஆரின் செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரின் பெயர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset