நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மன்மோகன் சிங் உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவமனையில் எதிர்ப்பையும் மீறி படம் பிடித்த மத்திய அமைச்சர்

புது தில்லி:

காய்ச்சலால் ஏற்பட்ட உடல்சோர்வு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மன்மோகன் சிங்கின் உடல்நிலை முன்பு இருந்ததைவிட இப்போது மேம்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தொடர்பாக தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். அவர் முழுஉடல் நலத்துடன் வீடு திரும்ப அனைவரும் இறைவனை வேண்டிக்கொள்வோம்' என்று கூறப்பட்டுள்ளது.

89 வயதாகும் மன்மோகன் சிங் படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார். அவரை சந்திக்க செல்லும்போது இந்த புகைப்படத்தை எடுத்ததாக சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்தார்.

PM Narendra Modi wishes Manmohan Singh a 'speedy recovery', Mansukh  Mandviya visits former PM at AIIMS  | India News | Zee News

படுக்கையில் மிகவும் பலவீனமாக உள்ள அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்த பின்பும் மத்திய அமைச்சர் புகைப்படகாரருடன் வலுக்கட்டாயமாக புகைப்படம் எடுத்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மன்மோகன் சிங்குக்கு கடந்த திங்கள்கிழமை காய்ச்சல் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்ட அவர், உடல் சோர்வாக இருப்பதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து புதன்கிழமை மாலை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கெனவே இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அது தொடர்பான பரிசோதனையும் அவருக்கு நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset