நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிலாளர்கள் தங்களுக்கு சொக்சோ பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்; சொக்சோ செலுத்தத் தவறும் முதலாளிகளுக்கு ஈராண்டு சிறை: டத்தோஸ்ரீ சரவணன்

பெட்டாலிங் ஜெயா:

மலேசியாவில் உள்ள ஒவ்வொரு தொழிலாளரும்  தங்களுக்கு சொக்சோ பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 தொற்றால் உயிரிழந்த செல்வம் காளிமுத்து, சந்திரகலா சிவலிங்கம் தம்பதியின் மூன்று பிள்ளைகளின் நலனுக்காக பெர்க்கேசோ ஓய்வூதிய நிதியை நேரில் சென்று வழங்கியபோது டத்தோ ஶ்ரீ சரவணன் அவ்வாறு கூறினார்.

தொற்றால் அடுத்தடுத்து பெற்றோர் இறந்ததால் அம் மூன்று குழந்தைகளும் கிள்ளானில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர்.

பெர்க்கேசோ சேமிப்புத் திட்டத்தின்கீழ் அந்தக் குழந்தைகளின் தாயார் மறைந்த திருமதி சந்திரகலா பெர்க்கேசோ உறுப்பினராக இருந்து சேமிப்புப் பணத்தைச் செலுத்தி வந்துள்ளார். சொந்தத் தொழில் செய்து வந்த தந்தை பெர்க்கேசோ நிதியில் ஏதும் சேமிக்கவில்லை.

எனவே, அவர்களது தாயாரின் பெர்க்கேசோ ஓய்வூதிய நிதி உதவி ஒவ்வொரு மாதமும் அந்த மூன்று பிள்ளைகளுக்கும் கிடைக்கும் எனத் தெரிவித்த டத்தோஶ்ரீ எம். சரவணன், ஒரு வேளை, பெற்றோர் பெர்க்கேசோ திட்டத்தின் கீழ் சேமித்திருந்தால், மாதாமாதம் அந்தக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் நிதி நல்ல கணிசமானத் தொகையாக இருந்திருக்கக் கூடும் எனக் குறிப்பிட்டார்.

பெர்க்கேசோ நிதி சேமிப்பைச் செய்யாமல் இருப்பதும் அதன் முக்கியத்துவத்தை சமுதாயம் அறியாமல் இருப்பதும் தமக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக அவர் சொன்னார்.

முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தின் அடிப்படையில் அதில் இருந்து ஒரு தொகையையும் முதலாளிகள் ஒரு தொகையையும் தொழிலாளியின் பெர்க்கேசோ கணக்கில் ஒவ்வொரு மாதமும் செலுத்தி இருப்பதை தொழிலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த இக்கட்டான  கோவிட்-19 காலத்தில் என்ன வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம். அவற்றைத் தவிர்ப்பதற்கும் அவ்வாறு நேரும்போது, அதற்கானத் தயார் நிலையாகவும் பெர்க்கேசோ சேமிப்புத் திட்டம் ஒரு சிறந்த வழிமுறையாகும் என டத்தோ ஶ்ரீ சரவணன் மேலும் சொன்னார்.

முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களின் பெர்க்கோசோ நிதியைச் செலுத்தத் தவறும்பட்சத்தில் அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டி எச்சரித்தார். 

தொடர்புடைய செய்திகள்

+ - reset