நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய மக்கள் தொகையில் 20 விழுக்காட்டினர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ள நிலையில் தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியுள்ளது இந்தியா

புது டெல்லி:

இந்தியா கோவிட் 19 தடுப்பூசிகளின் ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியுள்ளது.

இவ்வாண்டுத் தொடக்கத்தில் உள்ளூர் அளவில் பலர் பாதிக்கப்பட்டிருந்ததால், தடுப்பூசி ஏற்றுமதியை அது நிறுத்திவைத்திருந்தது. 

மேலும், உள்நாட்டு மக்களுக்கே தடுப்பூசி இல்லாமல் பற்றாக்குறையுடன் தடுமாறி நின்றிருக்கும்போது ஏற்றுமதி எதற்கு என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. அதனால் வேறு வழியின்றி ஒன்றிய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இப்போது எத்தனை தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பது பற்றி ஒன்றிய அரசு குறிப்பிடவில்லை.

இருப்பினும், தடுப்பூசி ஏற்றுமதிகள் முடுக்கிவிடப்படும் என்று அரசு பேச்சாளர் ஒருவர் கூறினார்.

How fast can vaccines solve India's COVID-19 crisis? It's complicated.

இந்தியாவில் தகுதிபெறும் பெரியவர்களில் 70 விழுக்காட்டினர் ஒரு முறையாவது தடுப்பூசி போட்டுவிட்டனர்.

மொத்த மக்கள் தொகையில் 20 விழுக்காட்டினர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியா இன்றுமுதல் அதன் எல்லைகளை மீண்டும் திறக்கிறது.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் இந்தியா செல்ல அனுமதிக்கப்படுவர்.

நோய்ப்பரவலுக்கு முன்பு ஒவ்வோர் ஆண்டும் சுமார் 11 மில்லியன் சுற்றுப்பயணிகள் இந்தியாவுக்கு வருகை தருவர்.

நோய்ப்பரவலால் மில்லியன் கணக்கானோர் வேலை இழந்துள்ளதால், சுற்றுப்பயணத்துறைக்குப் புத்துயிரூட்டுவது முக்கியம் என்று இந்தியா தெரிவித்தது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset