நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா தேர்தல்: தொகுதிப் பங்கீட்டில் பெரிக்கத்தான் நேசனல் மும்முரம்

கோலாலம்பூர்:

மலாக்கா மாநிலத் தேர்தலில் தொகுதிப்பங்கீடு தொடர்பாக பெரிக்கத்தான் நேசனல் அணியில் நடைபெறும் பேச்சுவார்த்தை விரைவில் முடிவுக்கு வரும் என பெர்சாத்து பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுதீன் தெரிவித்துள்ளார்.

பெர்சாத்து கட்சியின் மலாகா்கா மாநிலத் தலைவரும், பெரிக்கத்தான் நேசனல் மாநிலத் தலைவருமான டத்தோ முஹம்மது ரஃபீக் நைசாமொஹிதீன் (Mohd Rafiq Naizamohideen), இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

"கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் முதல், கூட்டணி கட்சிகள் வரை அனைவரையும்  ஒன்று திரட்டி தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது அம்மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மலாக்காவின் 28 தொகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படும். Gerai Prihatin Rakyat முன்னெடுப்புக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது.

"நேற்று நடைபெற்ற பெர்சாத்து உச்ச மன்ற கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. மலாக்கா தேர்தலை எதிர்கொள்ள முழுமையான ஏற்பாடுகளுடன் பெர்சாத்து தயாராக உள்ளது," என்றார் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுதீன்.

நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து, மலாக்கா அரசாங்கம் அண்மையில் கவிழ்ந்தது. இதையடுத்து அங்கு மாநிலத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

எதிர்வரும் 18ஆம் தேதி தேர்தல் ஆணையம் இதுகுறித்து ஆலோசனன நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset