நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மத்திய அமைச்சரை பதவி நீக்கக் கோரி குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்

புது டெல்லி:

உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூர் கெரியில் விவசாயிகள் மீது வாகனம் மோதி வழக்கு தொடர்பாக பாகுபாடற்ற விசாரணை நடைபெறுவதை உறுதிப்படுத்த இந்திய ஒன்றியய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் காங்கிரஸ் தலைவர்கள் புதன்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

லக்கீம்பூர் கெரி மாவட்டத்தில் உள்ள திகோனியா பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் போரட்டத்தின்போது அவர்கள் மீது பாஜகவினர் கார் மோதியதில் விவசாயிகள் நால்வர், பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்தார். பின்னர் அவர்களை விவசாயிகள் மடக்கி அடித்ததில் பாஜக தொண்டர்கள் இருவர், கார் ஓட்டுநர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாகவும், அவருடைய அறிவுறுத்தலின் பேரிலேயே விவசாயிகள் மீது  கார் மோதச் செய்ததாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா, மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஏ.கே. அந்தோனி ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை புதன்கிழமை நேரில் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்தனர்.

அதில், லக்கீம்பூர் கெரி வன்முறை சம்பவத்தில் அஜ்ய் மிஸ்ராவின் பங்கு குறித்து இன்னும் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. இத்தகையச் சூழலில் அவர் தொடர்ந்து மத்திய அமைச்சராக பதவி வகிப்பது உகந்ததல்ல. மேலும், உயர் செல்வாக்கு மிகுந்த உள்துறை இணையமைச்சர் பதவியில் தந்தை இருக்கும்போது, அவருடைய மகனிடம் பாகுபாடற்ற விசாரணை நடத்துவதில் காவல்துறை அதிகாரிகளுக்கு தயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset