நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசியல் ஸ்திரத்தன்மை, தெளிவான கொள்கைகள், பொது சேவை துறையின் அர்ப்பணிப்பு ஆகியவை மடானி அரசாங்கத்தின் வெற்றிக்கான காரணிகள்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

அரசியல் ஸ்திரத்தன்மை, தெளிவான கொள்கைகள், பொது சேவை துறையின் அர்ப்பணிப்பு ஆகியவை மடானி அரசின் வெற்றிக்கான காரணிகள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.

மலேசியாவை உலக அரங்கிற்கு உயர்த்துவதில் பொது மக்கள் அரசுடன் இணைந்து செயல்படுவதைத் தம்மால் உணர் முடிவதாகப் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார். 

நிலையான அரசியல் அமைப்பே வெற்றிக்கு வழிவகுக்கும். 

இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் மடானி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு அன்வார் இவ்வாறு கூறினார்.

மேலும், இந்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கும் தனியார் துறையின் அர்ப்பணிப்பையும் அன்வார் பாராட்டினார்.

தேசிய நிகழ்ச்சி நிரலை வெற்றியடையச் செய்வதில் தனியார் துறையானது நாட்டில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

மேலும், நாடு எப்போதும் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்வதில் தங்கள் கடமைகளைச் சிறப்பாகச் செய்த அரச மலேசிய காவல்துறை போன்ற தேசிய சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கும் பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset