நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெளிநாட்டு பயண செலவை விமர்சிப்பது அரை பைத்தியம் பிடித்தவர்களின் செயல்: பிரதமர்

கோலாலம்பூர்:

வெளிநாட்டு பயண செலவை விமர்சிப்பது அரை பைத்தியம் பிடித்தவர்களின் செயல்.

இது அரை பைத்தியம் பிடித்தவர்களின் காலக்கட்டம் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பிரதமர் என்ற முறையில் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டு வருகிறேன்.

இப்பயண செலவுகள் குறித்து ஒரு சில தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

உண்மையில் இந்த விவகாரத்தில் தனது அரசாங்கம் ஒரு சுத்தமான நடைமுறையை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக இப்பயணத்தில் கலந்து கொள்ளும் தனியார் நிறுவனங்கள் தங்கள் சொந்தச் செலவை செலுத்துமாறு  வலியுறுத்தப்பட்டுள்ளது.

இருந்தாலும் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இது அரை பைத்தியம் பிடித்தவர்களின் செயல். இது அவர்களின் காலக்கட்டம் என்று பிரதமர் கூறினார்.

தனியார் நிறுவனங்களின் குழுவுடன் வருபவர்கள், புரோட்டோன், பெட்ரோனாஸ், யின்சன், சபுரா எனர்ஜி, டாப் குளோவ் இதர நிறுவனங்கள் போன்ற முதலீடு அல்லது முதலீடு செய்ய முற்படலாம்.

ஆனால்  இந்த நாட்டில் திருடுபவர்களையும், கொள்ளையடிப்பவர்களையும், கொள்ளையடிப்பவர்களையும் மிக அதிகமாக நடத்தினால், அவர்கள் வணங்கப்படுவார்கள்.

ஆனால் தூய்மையான வழி திட்டத்தை நடத்த முயற்சிக்கிறோம், அவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset