செய்திகள் மலேசியா
துன் டாய்ம் சொத்து விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்கிறது: எம்ஏசிசி
புத்ராஜெயா:
மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனுடின் சொத்து விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்கிறது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எம்ஏசிசி ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் இன்னமும் நிறைவு பெறவில்லை.
அதே வேளையில் துன் டாய்ம், அவரது குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட நிதிச் சொத்துக்களையும் எம்ஏசிசி கண்காணித்து வருகிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 254-ன்படி சொத்து அறிவிப்பு நோட்டீஸைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இருந்து இறந்தவரை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் துன் டாய்மை விடுவித்தாலும் இந்த விசாரணை தொடர்கிறது.
எம்ஏசிசி சட்டம் 2009 இன் பிரிவு 23 மற்றும் பணமோசடி தடுப்பு பிரிவு 4 (1) இன் படி, இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 23, 2024, 1:18 pm
மலேசியாவை உலகின் துணிச்சலான, சிறந்த நாடாக உயர்த்த மடானி அரசுக்கு இடம் கொடுங்கள்: பிரதமர்
November 23, 2024, 1:17 pm
வெளிநாட்டு பயண செலவை விமர்சிப்பது அரை பைத்தியம் பிடித்தவர்களின் செயல்: பிரதமர்
November 23, 2024, 1:16 pm
பைசால் ஹலிம் மீது ஆசிட் வீசியவர்களுக்கு எதிராக விசாரணைகள் தொடர்கிறது: ஐஜிபி
November 23, 2024, 1:15 pm
அதிகாரிகளை கண்டதும் காய்கறிகளை விட்டு விட்டு ஓடிய அந்நிய நாட்டினர்
November 23, 2024, 1:12 pm
இலவச குடிநீர் திட்டத்திற்கான நிபந்தனைகளை மறுஆய்வு செய்ய மாநில அரசு தயார்: அமிருடின் ஷாரி
November 23, 2024, 12:16 pm
திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 398-ஆக உயர்வு
November 23, 2024, 12:02 pm
மலேசிய கடப்பிதழ் வைத்திருப்பவர்களுக்கு 30 நாட்கள் விசா இலவசம்: சீனா அறிவிப்பு
November 23, 2024, 12:01 pm