நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

என்கேவிஇ நெடுஞ்சாலையில் 7 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தால் 4 கிலோ மீட்டருக்கு நெரிசல்

கோலாலம்பூர்:

என்கேவிஇ நெடுஞ்சாலையில் 7 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தால் 4 கிலோ மீட்டருக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் இதனை உறுதிப்படுத்தினார்.

என்கேவிஇ நெடுஞ்சாலையின் சுபாங்கில் இருந்து டாமன்சாரா செல்லும் சாலையின் கிலோமீட்டர் 14.4 இல் ஏழு வாகனங்கள் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.

இவ்விபத்து தொடர்பான புகார் நேற்று இரவு 8.56 மணிக்கு கிடைத்தது.

அதைத் தொடர்ந்து, டாமன்சாரா தீயணைப்பு நிலையத்திலிருந்து 10 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. கிட்டத்தட்ட 7 வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கின.

புரோட்டான் எக்ஸ் 70, புரோட்டான் சாகா, டொயாட்டா கெம்ரி, மஸ்டா, பெரோடுவா அக்ஸியா, இரண்டு டொயோட்டா ஹைலேக்ஸ் ஆகிய வாகனங்கள் இந்த விபத்தில் மோதிக் கொண்டன. 

இதில் டொயாட்டா கெம்ரி காரில் சிக்கிக் கொண்ட ஒருவரை தீயணைப்பு வீரர்கள் வெற்றிகரமாக மீட்டனர்.

இவ்விபத்தால் அப்பகுதியில் பல மணி நேரங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset