நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திரெங்கானு மாநிலத்தில் வெள்ளம் மோசமடைந்துள்ளது: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2765 ஆக உயர்வு 

கோல திரெங்கானு: 

மலேசியாவின் கிழக்கு கரை மாநிலமான திரெங்கானுவில் வெள்ளம் மோசமடைந்துள்ளது. இந்த வெள்ளம் காரணமாக இதுவரை 2,765 பேர் பாதிக்கப்பட்டு தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் 

நேற்றிரவு 212 பேர் பாதிக்கப்பட்டிருந்த வேளையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அதன் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்தது 

மொத்தமாக 603 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் முறையே 14 வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர். 

திரெங்கானுவின் கெமாமான் மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக மோசமான பாதிப்பினை எதிர்நோக்கியது 

554 குடும்பங்களைச் சேர்ந்த 2584 பேர் பாதிக்கப்பட்டு அங்குள்ள 6 பி.பி.எஸ் மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். 

இந்நிலையில், திரெங்கானுவில் வெள்ள நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாக மாநில பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset