நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜோ லோ மியான்மாரில் பதுங்கியிருக்கலாம்: நஜிப்பின் வழக்கறிஞர் ஷாபி குற்றச்சாட்டு

கோலாலம்பூர்:

தப்பியோடிய தொழிலதிபர் ஜோ லோ இப்போது பாதுகாப்பாக மியான்மாரில் பதுங்கி இருப்பதாக நம்பப்படுகிறது.

முன்னாள் பிரதமர் டத்தோச்ஶ்ரீ நஜிப்பின் வழக்கறிஞர் டான்ஶ்ரீ ஷாபி அப்துல்லா இதனை கூறினார்.

1 எம்டிபியின் முன்னாள் சட்ட ஆலோசகர் ஜாஸ்மின் லூவிடம் குறுக்கு விசாரணை செய்ததன் அடிப்படையில் இதனை நான் கூறுகிறேன்.

அவர் ஒரு காலத்தில் ஜோ லோவின் பினாமியாக கருதப்பட்டார்.

கடந்த ஆண்டு அதிகாரிகளிடம் சரணடைவதற்கு முன்பு 2018 இல் காணாமல் போன ஜாஸ்மின், பில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள 1 எம்டிபியின் நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான நஜிப்பின் ஊழல் விசாரணையில் முக்கிய சாட்சியாக ஆனார்.

நான் விசாரித்த லூவின் சாட்சியத்தில் ஜோ லோ  மியான்மரில் இருப்பதாகவும், அங்குள்ள தளபதிகளால் பாதுகாக்கப்படுகிறார் என்றும் நினைக்கிறேன்.

ஏனென்றால் ஜோ லோவினால் லூவிற்கான கடப்பிதழை பெற்று அதனைபயன்படுத்தாமல் மியான்மருக்குள் நுழைய முடிந்ததுள்ளது.

ஆக ஜோ லோ மியான்மாரில் மறைந்திருக்கலாம்.

உண்மைகளை சரியாகப் பெறுதல், 1எம்டிபி, பிற வழக்குகளின் சொல்லப்படாத கதைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற மன்றத்தில் அவர் இவ்வாறு கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset