நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மின் சிகரெட் விற்பனை உரிமம் வழங்குவதை உள்ளூர் அதிகாரிகள் நிறுத்தலாம்: ஜுல்கிஃப்லி அஹமத்

கோலாலம்பூர்:

வேப் எனும் மின்-சிகரெட் பயன்பாட்டுக்குத் தடையில்லை ஆனால் அதன் விற்பனைக்கு உரிமம் வழங்குவதை உள்ளூர் அதிகாரிகள் நிறுத்தலாம் என்று சுகாதார அமைச்சர் ஜுல்கிஃப்லி அஹமத் தெரிவித்துள்ளார். 

சில மாநிலங்கள் அந்த நடவடிக்கையை எடுத்துள்ளன.

உதாரணத்துக்கு ஜொகூர், பகாங் ஆகிய மாநிலங்களில் வேப் விற்பனைக்கு உரிமம் வழங்குவதை உள்ளூர் அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். 

மின் சிகரெட்டுக்கள் விற்பனையை முற்றிலுமாகத் தடை செய்வது பற்றி பரிசீலிக்குமாறு பகாங் மாநில சுல்தான் விடுத்த பரிந்துரை தொடர்பில் அமைச்சு கருத்துரைத்தது.

நாடு முழுவதும் குறிப்பாக பாஹாங்கில் இளையர்களிடையே அதிகரித்து வரும் போதைப் புழக்கம் கவலையளிப்பதாக சுல்தான் கூறியிருந்தார்.

நாட்டில் அதிகமான போதைப் புழங்கிகளைக் கொண்ட மாநிலங்களின் வரிசையில் பகாங் 5-ஆவது இடத்தில் இருக்கிறது. 

அம்மாநிலத்தில் 11,750 போதைப் பித்தர்கள் உள்ளனர். 

அவர்களில் 57 விழுக்காட்டினர் 15க்கும் 30க்கும் இடைப்பட்ட இளையர்கள் என்று தேசியப் போதைப் பொருள் ஒழிப்பு அமைப்பு கூறுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset