நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் - சிங்கப்பூர் எல்லையைக் கடக்க அடுத்தாண்டு முதல் QR குறியீட்டைப் பயன்படுத்தலாம்

ஜொகூர் பாரு:

ஜொகூர் - சிங்கப்பூர் எல்லையைக் கடக்க அடுத்தாண்டு முதல் கடப்பிதழ்களுக்குப் பதிலாக QR குறியீட்டைப் பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாகன ஒட்டுநர்களும் லாரி ஓட்டுநர்களும் ஜொகூர் - சிங்கப்பூர் எல்லையைக் கடக்க அடுத்தாண்டு முதல் QR குறியீட்டைப் பயன்படுத்தலாம்.

கடந்த ஜூன் மாதம் பேருந்துகளுக்கும் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கும் சோதனை முறையில் கொண்டுவரப்பட்ட அந்த நடைமுறை வெற்றியடைந்துள்ளது.

இதையடுத்து அதனை கார்களுக்கும் லாரிகளுக்கும் விரிவுபடுத்துவதாக மலேசியா அறிவித்துள்ளது.

தற்போது மலேசியர்கள் மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களையோ பேருந்துகளையோ ஓட்டிவரும்போது ஜொகூர் நிலவழிச் சோதனைச் சாவடிகளில் QR குறீயீட்டைப் பயன்படுத்த முடிகிறது.

ஆனால் சிங்கப்பூரில் பதிவுபெற்ற வாகனங்களுக்கும் இது பொருந்துமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

QR குறியீடு கொண்ட செயலி மலேசியக் கடப்பிதழுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

கடப்பிதழைப் பயன்படுத்தி எல்லையைக் கடக்கும்போது ஒரு மோட்டார் சைக்கிளோட்டிக்கு 8 விநாடிகள் தேவைப்படுகிறது.

அதுவே QR குறியீட்டைப் பயன்படுத்தும்போது அது 5 விநாடிகளாகக் குறைகிறது.

இதற்குமுன்னர் ஒரு மணி நேரத்தில் 500லிருந்து 600 மோட்டார் சைக்கிளோட்டிகள் மட்டுமே சோதனைச் சாவடியைக் கடக்க முடிந்தது.

ஆனால் QR குறீயீட்டைப் பயன்படுத்தும்போது ஒரு மணி நேரத்தில் 750க்கும் அதிகமான மோட்டார் சைக்கிளோட்டிகள் கடந்து செல்ல முடிகிறது என்று  உள்துறை அமைச்சு கூறியது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset