நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புகைபிடித்தல் பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வேப் கட்டுப்படுத்தப்படுகிறது: சுகாதார அமைச்சர்

புத்ராஜெயா:

புகைபிடித்தல் பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வேப் முழுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது என்று சுகாதார அமைச்சர் ஜூல்கிப்ளி அஹ்மத் இதனை கூறினார்.

கடந்த அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வந்த பொது சுகாதாரத்திற்கான புகைபிடிக்கும் பொருட்கள் கட்டுப்பாடு சட்டம் 2024 மூலம் வேப் பயன்பாட்டில் ஒழுங்குமுறை அணுகுமுறையை அரசாங்கம் தொடர்ந்து பின்பற்றும்.

மத்திய அரசு தேசிய அளவில் வேப் விற்பனையைத் தடை செய்யக் கூடாது என்ற தனது நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஆனால் ஊராட்சி அதிகாரிகள் மூலம் வேப் விற்பனையைத் தடை செய்வது உட்பட அந்தந்த கொள்கைகளைத் தீர்மானிக்க மாநில அரசாங்கங்களுக்கு அதை விட்டு விட்டதாக கூறினார்.

மாநில அரசு அவர்களின் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் அமைச்சால் வேப் பயன்பாட்டை தடை செய்ய முடியவில்லை.

எனவே அமைச்சு இதனை ஒழுங்குபடுத்தும் அணுகுமுறையை எடுத்துள்ளது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset