நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணையப் பகடிவதை தொடர்பாக ஒரு நாளைக்கு 27 புகார் அறிக்கைகளை மலேசியத் தகவல் தொடர்பு பல்லூட ஆணையம் பெறுகின்றது: ஃபஹ்மி ஃபாட்சில் 

கோலாலம்பூர்: 

இவ்வாண்டின் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை இணையப் பகடிவதை தொடர்பான  8,339 புகார் அறிக்கைகளை மலேசிய தகவல் தொடர்பு பல்லூட ஆணையம், (MCMC) பெற்றுள்ளதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில்  தெரிவித்தார்.

சராசரியாக ஒரு நாளைக்கு  27 புகார் அறிக்கைகளை மலேசிய தகவல் தொடர்பு பல்லூட ஆணையம் பதிவு செய்துள்ளது.

கடந்தாண்டு மட்டும், முகநூல் தளத்தில், வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இணைய மோசடியால் 432 மில்லியன் ரிங்கிட் இழப்பைப் பதிவு செய்துள்ளது. 

பாலியல் குற்றங்களுக்காக, குறிப்பாக சமூக ஊடகங்கள் சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு எதிராக, 2023-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 525 ஆக உள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset