செய்திகள் மலேசியா
பள்ளி கட்டடத்தின் 8-ஆவது மாடியிலிருந்து விழுந்து மாணவி மரணம்
ஜோர்ஜ் டவுன்:
இடைநிலைப் பள்ளி கட்டடத்தின் எட்டாவது மாடியிலிருந்து விழுந்து இரண்டாம் படிவ மாணவி உயிரிழந்தார்.
பினாங்கு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியிடமிருந்து நேற்று மாலை 5.57 மணிக்கு இச்சம்பவம் குறித்து தனது தரப்புக்குப் புகார் கிடைத்தது என்று வடகிழக்கு மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி அப்துல் ரோசாக் முஹம்மத் கூறினார்.
சம்பவ இடத்தில் காவல்துறையினர் நடத்திய விசாரணை மற்றும் இறந்தவரின் உடலைப் பரிசோதித்ததில் இந்த வழக்கில் குற்றத்திற்கான தடையும் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் மேல் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார்.
விசாரணை பாதிக்கும் வகையில் வழக்கு தொடர்பான தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும், இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களை மதிக்கும் வகையில் அச்சம்பவம் தொடர்பான படங்கள் அல்லது வீடியோக்களை பகிர வேண்டாம் என்றும் அப்துல் ராசாக் பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 23, 2024, 1:18 pm
மலேசியாவை உலகின் துணிச்சலான, சிறந்த நாடாக உயர்த்த மடானி அரசுக்கு இடம் கொடுங்கள்: பிரதமர்
November 23, 2024, 1:17 pm
வெளிநாட்டு பயண செலவை விமர்சிப்பது அரை பைத்தியம் பிடித்தவர்களின் செயல்: பிரதமர்
November 23, 2024, 1:16 pm
பைசால் ஹலிம் மீது ஆசிட் வீசியவர்களுக்கு எதிராக விசாரணைகள் தொடர்கிறது: ஐஜிபி
November 23, 2024, 1:15 pm
அதிகாரிகளை கண்டதும் காய்கறிகளை விட்டு விட்டு ஓடிய அந்நிய நாட்டினர்
November 23, 2024, 1:12 pm
இலவச குடிநீர் திட்டத்திற்கான நிபந்தனைகளை மறுஆய்வு செய்ய மாநில அரசு தயார்: அமிருடின் ஷாரி
November 23, 2024, 12:16 pm
திரங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 398-ஆக உயர்வு
November 23, 2024, 12:02 pm
துன் டாய்ம் சொத்து விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்கிறது: எம்ஏசிசி
November 23, 2024, 12:02 pm
மலேசிய கடப்பிதழ் வைத்திருப்பவர்களுக்கு 30 நாட்கள் விசா இலவசம்: சீனா அறிவிப்பு
November 23, 2024, 12:01 pm