நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா பிரேசிலோடு இணைந்து பசி, வறுமை நிலையைப் போக்க ஒத்துழைக்கும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

மலேசியா பிரேசிலோடு இணைந்து பசி, வறுமை நிலையைப் போக்க ஒத்துழைக்கும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

இது நிலையான வளர்ச்சி இலக்குகளை ஊக்குவிக்கும் அதே வேளையில் பட்டினி மற்றும் வறுமையை ஒழிப்பதற்கான முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான பிரேசிலின் G20 கூட்டணி தலைமையிலான ஒரு முயற்சியாகும்.

மலேசியாவின் கூட்டணியில் பங்கேற்பது 2030-ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி நிரலுக்கான அதன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

பசி மற்றும் வறுமையைச் சமாளிப்பதில் யாரும் பின்தங்கியிருக்க மாட்டார்கள்.

ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற G20 உச்சநிலை மாநாட்டில் "பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டம்" என்ற முதல் அமர்வில், "மடானியின் பொருளாதார கட்டமைப்பின் மூலம் மலேசிய அரசாங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது" என்று அவர் மேற்கோள் காட்டினார். 

எங்கள் கவனம் நிர்வாக கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், நிதி நிலைத்தன்மையை உறுதி செய்தல், பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல், டிஜிட்டல் மாற்றத்தை மேம்படுத்துதல் மற்றும் காலநிலை நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியவை அடங்கும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset