நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

செர்பியாவில் ரயில் நிலையத்தில் விபத்து: பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு 

பெல்க்ரேட்: 

கடந்த ஞாயிற்றுக்கிழமை செர்பியாவில் உள்ள ரயில் நிலையத்தின் கூரை விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக பலி எண்ணிக்கை 15ஆக உயர்வு கண்டது 

நொவி சாட் ரயில் நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 14 பேர் பலியாகினர். ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட வேளையில் அவரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் 

மேலும் சிலர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்தைத் தொடர்ந்து செர்பியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் நொவி சாட், தலைநகரம் பெல்க்ரேட் முழுவதும் போராட்டம் நடத்தினர் 

பொறுப்பற்ற செயல்பாடுகளால் அப்பாவி பொதுமக்கள் மரணமடைந்துள்ளனர். இதற்கு அரசாங்கம் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset