நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உரிமம் இல்லாமல் மலேசியாவிற்கு பயணிகளை ஏற்றிச் சென்ற 24 வாகன ஓட்டுநர்கள் கைது

கோலாலம்பூர்:

முறையான உரிமம் இல்லாமல் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவிற்குப் பயணிகளை ஏற்றிச் சென்ற 24 வாகன ஓட்டுநர்களை இந்த ஆண்டு நிலப் போக்குவரத்து ஆணையம் கைது செய்துள்ளது.

அது கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அதிகம்.

பள்ளி விடுமுறை தொடங்கியிருப்பதால் பயணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். 

பயணிகள் தங்கள் பயணச் சேவையைக் கவனமாகத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று டாக்சி சேவை அமைப்பு எச்சரித்துள்ளது. 

எல்லையைக் கடக்கும் சட்டவிரோத டாக்சி சேவை விளம்பரங்கள் இணையத்தில் காணப்படுகின்றன.

அதில் சிலர் தங்களிடம் உரிமம் இருப்பதாகக் கூறுகின்றனர்.

உரிமம் பெற்ற குறிப்பிட்ட டாக்சிகள் மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்ய முடியும் என்று ஆணையம் கூறியது.

சட்டவிரோதச் சேவைகளுக்குப் பயணக் காப்பீடு இல்லை.

பிடிபட்டால் அதிகபட்சம் 3,000 வெள்ளி அபராதம், 6 மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset